கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
கடற்படை நியதிகளுக்கு புறம்பான வகையில் யோசித வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் யோசித ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வந்தார்.
இந்தக் காலப்பகுதியில் யோசித ராஜபக்ஸ பல நாடுகளுக்கு பல தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளார். கடற்படைத்தளபதியின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி எழுத்து மூலம் அனுமதி கோராமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடாபில் கடற்படையினர் உள்ளக விசாரணைக நடத்தி பாதுகாப்பு அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். எனவே யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு, கடற்படையினருக்கு அறிவித்துள்ளது.