துருக்கி விமானம் ஒன்று நடுவானில் பறவையுடன்; மோதியதில் அதன் முன் பாகம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனைய டுத்து குறித்த விமானம் அவ சரமாக தரையிறக்கப்பட்டது.
ஸ்தன்பூலில் இருந்து நவி ‘ர் நகருக்கு செவ்வாயன்று பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலேயே பறவை மோதியுள்ளது. இதனை அடுத்து சம்பவம் குறித்து விமானி கட்டுப்பாட்டு அறையிடம் தெரிவித்ததை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 125 பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை என்று துருக்கி விமான சேவை குறிப்பிட்டுள்ளது.
விமானத்தில் பறவை மோதி இவ்வாறு அடிக்கடி விபத்து நிகழ்வதாக விமான சேவையில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “விமானத்தின் மூக்கு பகுதியில் பறவை மோதி சேதம் ஏற்படுவது சிவில் வான் போக்குவரத்தில் பொதுவான நிகழ்வாகும்” என்று துருக்கி ஏர்லைன்ஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
“விமானத்தின் முன்பாகம் இவ்வாறான விபத்துகளில் தாக்கத்தை குறைக்கும் வகையில் மென்மையாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் என்ஜpன் பகுதியில் பறவை மோதினாலே ஆபத்தானதாகும். ஏனைய பகுதிகளில் பறவை மோதுவதால் எந்த ஆபத்தும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.