அரசாங்கத்தை அமைப்பது ஐ. தே. க. வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஜே. வி. பி யோ அல்ல. மக்களே அதனைத் தீர்மானிக்கின்றனர் -அமைச்சர் ராஜித்த

timthumb

 மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசம் தொடர்பாக தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு விடயங்களை முன்வைக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

தேர்தலை வெற்றிகொள்வது மக்களால் அளிக்கப்படும் இறுதி வாக்குகளே என்றும் அதனை வெற்றி கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே முக்கியம் என்றும் அமைச்சர் தெரிவி த்தார். கடந்த தேர்தலில் இந்த இறுதி தளம்பல் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்து விட்டதெனக் 

குறிப்பிட்ட அமைச்சர், இதனால் அவரது பிரவேசம் தேர்தல் பெறுபேறுகளில் எந்த பாதிப்பையும் கொடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். 

எதிர்வரும் தேர்தலில் எவர் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினாலும் எந்த பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்ட அமைச்சர்: நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். 

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். 

இந்த நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவுகிறது. அதை எவரும் மறுக்க முடி யாது. இப்போது மக்கள் காணாமற் போவதில்லை. வெள்ளைவேன் பீதி கிடையாது. மரண பயம் எவருக்கும் கிடையாது. இதுவே நல்லாட்சியின் முக்கிய இலட்சணம். 

மனித உரிமையே மக்களின் வாழ்வ தற்கான உரிமை. அது இப்போது பாது காக்கப்பட்டுள்ளது. இப்போது எந்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதில்லை. எவரும் வெளிந ¡ட்டுக்கு ஓடித்தப்ப வேண்டிய நிலை இப்போது கிடையாது. 

தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் சில காலம் தேசிய அரசாங்கம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. 

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை அவர் வழங்க முன்வந்ததில்லை. எனினும் இப்போது அவரிடம் முன்னாள் ஜனாதிபதி பிரதமர் பதவியை கேட்டு வந்துள்ளார். இது எவ்வாறு நியாயமாகும் என செய்தியாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்:-

இது நல்லபாடம். இவற்றைத் தெரிந்துகொண்டு தான் அரசியல் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் இது பற்றி சிந்திக்க வேண்டும். 

எமது அரசாங்கத்தைப் பொறுத்த வரை இறுதிப் பெறுபேறு நல்லாட்சியே. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட கூட்டத்தில் இராணுவ அதிகாரியொருவர் கைத் துப்பாக்கியோடு உட்பிரவேசித்தமை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித இது தொடர்பில் பிரதமரினால் ஒரு உப குழு நியமிக்கப் பட்டுள்ளது. இதற்குப் பொலிஸ் மா அதிபரே தலைமை வகிக்கின்றார். சட்ட மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். அவர்களே இது பற்றி ஆராய்ந்து வருகின்றனர். 

நூறு நாற் திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், மக்கள் வாக்களித்தது இந்த வேலைத் திட்டத்திற்கே, இதன் கடைசிப் பகுதியையும் நிறைவு செய்த பின்னரே தேர்தலுக்குப் போகவேண்டும் என்ற மன நிலையிலேயே நாம் உள்ளோம். 

அதற்காகத்தான் நாம் வெளியே வந்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பாடுபட்டோம். இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நாம் எமது உயிரையும் பணயம் வைத்து செயலில் இறங்கினோம். 

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வொன்றில் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே கடமையிலிருப்பர். அமைச்சர்களாகிய எமது பாதுகாப்பு அதிகாரிகள் கூட நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வெளியிலேயே தரித்திருப்பர், அவர்கள் கூட சோதனையிடப்படுவர். 

இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளபோது இராணுவ அதிகாரியொருவர் அங்கு அவசியமில்லை. முன்னாள் ஜனாதிபதி தமக்குப் பாதுகாப்பு போதாது என குறைகூறி வருகின்றார். எனினும் அவரது பாதுகாப்பு அதிகாரியோ இங்கு வந்துள்ளார் என்பது விந்தையே. 

ஜனாதிபதியின் பாதுகாப்பு என்ற ரீதியில் இந்த விடயம் பாரிய பிரச்சி னைக்குரியது. 

அரவது முழுமையான பாதுகாப்புக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினரொருவரின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர் ஒருவர் வருவதில்லை. 

இந்த வகையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெளிவில்லையென்றால், 

கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு நிகழ்ந்ததும் இதுபோன்ற ஒன்று தான். தாக்குதல் நடத்துபவர்கள் ஒரே தரத்தில் வந்து நேரடியாக தாக்குதல் நடத்துவதில்லை. இதுபோன்று தான் வந்து அசைவுகளை நோட்டம் பார்த்து பின்னரே செயலில் இறங்குவர். இவற்றை ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்தில் கொள்வது முக்கியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் நிற்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 

இதில் சாதகமா பாதகமா என்பதை விட ஒன்றைக் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளால் அக்கட்சி ஆட்சியமைக்கவும் முடியாது அதேபோன்று ஐ. தே. க வின் வாக்குகளால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. அரசாங்கத்தை அமைப்பது ஐ. தே. க. வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஜே. வி. பி யோ அல்ல. மக்களே அதனைத் தீர்மானிக்கின்றனர். 

அதற்காகவே தேர்தல் காலங்களில் மக்களோடு தொலைக்காட்சியூடாகவும் ஏனைய ஊடகங்களுக்கூடாகவும் நாம் கஷ்டப்பட்டு மக்களுடன் பேசுகின்றோம். மக்கள் தேர்தலில் அளிக்கும் வாக்குகள் யாருக்கோ அக்கட்சியே வெற்றிபெறும். 

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்தால் அது அச்சுறுத்தலாக இருக்குமா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்: மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர். இளைஞர்கள், கல்விமான்கள் உட்பட அனைவரும் கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கே தமது வாக்குகளை அளித்துள்ளனர் என்பது உறுதியாகிறது. அந்த வாக்கிலேயே நாம் வெற்றிபெற்றோம். ஐ. தே. க வெற்றியடைந்ததும் அதுவே தான். 

நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நாம் இத்திட்டத்தை ஆறு மாத திட்டமாகவே ஆரம்பத்தில் தீர்மானித்தோம். 

எனினும் ஐ. தே. க. வே இதனை நூறு நாள் திட்டமாக்க வேண்டும் என்றது. எனினும் அதுவும் நன்றே. ஏனெனில் எந்த அரசாங்கத்தாலும் நூறு நாளில் இந்தளவு வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.