ஐஎஸ் அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையர் ஓருவரின் வீடுகளை அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.கடந்த வருடம் 41 வயது இலங்கையரான முகமது உனைஸ் முகமது அமீன் என்ற இலங்கையர் ஐஎஸ் அமைப்பின் பிராச்சார வீடியோவில் தோன்றி அந்த அமைப்பின் சுகாதார சேவைக்கு ஆதரவை கோரியிருந்தார். 2014 இல் சிரியாவிற்கு தப்பியோடியுள்ள அமீன் அங்கு ஜஎஸ் அமைப்பில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் , இதனை அவரே வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
வியாழக்கிழமை அதிகாலை குறிப்பிட்ட நபரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மெல்பேர்னின் புறநகர் பகுதியிலேயே இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன.அமீனின் முன்னாள் மனைவிகளின் வீடுகளே சோதனையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.