(வீடியோ) YLS . ஹமீட்டின் பிரச்சனை என்ன? பேராளர் மகாநாட்டில் என்ன நடந்தது ?

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வீடியோ சுபைர் MPC உடனான அதிரடி நேர்காணல்:-VIDEO 

எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசானது நாட்டிலே முக்கியமான பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் அரசியல் வரலாற்றில் தனியாக நின்று தங்களுடைய சின்னத்தில் போட்டியிட்ட பொழுது அம்பாறை மாவட்ட மக்கள் அளித்த 33000 வாக்குகளானது அம்மக்கள் கட்சியின் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையின் அடிப்படையிலும் நன்மதிப்பின் அடிப்படையிலுமேயே கிடைக்கபெற்றதாகும். ஆகவே கட்சியின் தலைமையானது வாக்களித்த அம்பாறை மாவட்டத்து மக்களை மதிப்பளிக்கும் முகமாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கே கொடுத்திருக்க வேண்டும் எனக்கூறிய முன்னாள் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் சுபைர் கட்சியில் அங்கத்துவம் பெற்றிராத, கட்சிக்கு ஐந்து ரூபாய்கள் கூட செலவழித்திராத, கட்சிக்கு எவறென்று கூட தெரியாத, கட்சிக்கு ஒரு பொழுதும் ஒன்றும் செய்ய முடியாத கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் உள்ள நஹவிற்கு கொடுத்தது பாரிய பிரச்சனையாக ஒரு புறமிருக்க ஆகக்குறைந்து தேசிய பட்டியலை கிடைத்தவுடன் கட்சியின் உயர்பீடத்தினையாவது அழைத்து கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தலைமைத்துவம் முடிவெடுத்து நஹவிற்கு கொடுத்த விடயமானது உண்மையாக கட்சியினை நேசிக்கின்ற எவறாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்

அதே போன்று வாக்களித்த அம்பாறை மாவட்டத்து மக்களுக்கு தேசிய பட்டியலினை கொடுக்காமல் ஏமாற்றியது மட்டுமல்லாமல் அதனை மறைப்பதற்காகவும், வருக்கின்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காவுமே கட்சியின் தலைமையானது தனது அமைச்சின் கீழ் உள்ள தினைக்களங்களில் இருக்கின்ற  தலைவர் பதவிகளை அம்பாறைமாவட்டத்தில் கட்சி சார்பாக களமிறக்கிய வேட்பாளர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கின்றது. இவ்வாறான நியமனங்கள் தனிப்பட்ட முறையில் குறித்த வேட்பாளர்களை திருப்திபடுத்தும் முகமாக கொடுக்கப்பட்டதே தவிர குறித்த பதவிகளை வைத்துக்கொண்டு வாக்களித்த அம்பாறை மாவட்டத்து மக்களுக்கு எதனையும் செய்து விடமுடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாக காணப்படுக்கின்ற அதே நேரத்தில் கட்சியின் வளர்சிக்கோ அல்லது பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகளுக்கோ எந்த வகையிலும் உதவ கூடிய விடயமாகாது என்பதனை கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

நானும் அரசியலில் ஐந்து வருடங்களுக்கு மேல் மாகாணத்திலே முக்கியமான முழு அமைச்சினை கையாண்டவன் அனுபவத்தின் அடிப்படையில் இவ்வாறான தினைக்கள தலைமை பதவிகளை வைத்துக்கொண்டு எவ்வாறான சேவைகளை மக்களுக்கு செய்து கொடுக்க முடியும் என்பதனை நான் நன்கறிந்தவனாக இருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் இதற்கு முதலும் இவ்வாறான அமைச்சு பதவியினையும் அமைச்சின் கீழ் பல தினைக்களங்களையும் வைத்திருந்த கட்சியின் தலைமையானது மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ அல்லது அம்பாறை மாவட்டத்தில் ஒரு சிலருக்கோ தினைக்கள தலைமை பதவிகளை கொடுத்திருக்கவில்லை. மாறாக கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு மட்டுமே ஒரு பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அம்பாறை மாவட்டத்தில்  எதற்காக இம்முறை இவ்வாறு போட்டியிட்டவர்களுக்கெல்லாம் தினைக்கள தலைமை பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதின் அர்த்தத்தினை புறிந்துகொள்ள முடியும் என மேற்கண்டவாறு சமகால எதிர்கால அரசியல் நடவடிக்கைககள், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஏற்பட்ட பிளவுகள் சம்பந்தமாக முன்னால் அகில இலங்கை மக்கள் கங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சருமான சுபைர் உடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.

மேலும்., எதற்காக அரசியல் அறிமுகம் தந்த கட்சியிலிருந்து வெளியேறினீர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொழுது  இறுதி நேரத்தில் ஈரான் நாட்டிற்கு எதற்காக சென்றீர்கள், நகமும் சதையுமாக இருந்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும்  உங்களுக்கும் இடையில் என்ன நடந்தது? வை.எல்.எஸ் ஹமீட்டின் பிரச்சனை  என்ன? பேராளர் மகாநாட்டில் என்ன நடந்தது, அதீகமாக ஏன் கிழக்கு மாகாண முதலமைச்சரரை விமர்சிக்கின்றீர்கள்? எதிர்கால சமகால அரசியல் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் புதிய கட்சியினை ஆரம்பிக்கின்ற என்னங்கள் இருக்கின்றனவா?, இன்று உங்களுடைய தேசிய தலைவராக எவரை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், போன்ற கேள்விகளை முன்னால் சுகாதார அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சுபைரிடம் தொடுத்த பொழுது அவர் வழங்கிய உணர்சிகரமானும் சுவாரஸ்யமானதுமான பதில்களின் காணொளியானது இங்கே எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.