புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட 85000ற்கும் மேற்பட்டவர்களை சுவீடன் திருப்பியனுப்பவுள்ளது !

புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட85000ற்கும் மேற்பட்டவர்களை சுவீடன் திருப்பியனுப்பவுள்ளதாக அந்த நாட்டின் உள்துறையமைச்சர் தெரிவித்துள்ளார். சுவீடன் விமானங்களை பயன்படுத்தி அவர்களை தங்கள் சொந்த நாடுகளிற்கு அனுப்பும் அதற்கு பல வருடங்கள் எடுக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

download
2015 இல் சுவீடனில் புகலிடம்கோரி 163,000பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் சுவீடன் இந்த வருடம் தனது எல்லை பாதுகாப்பை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைவடையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவீடன் கடந்த வருடம் பரிசீலனை செய்த 58,000 புகலிடக்கோரிக்கைகளில் 55 வீதமானவை மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.சுமார் 80,000பேர்வரை தங்கள் சொந்தநாடுகளிற்கு திருப்பியனுப்பபடலாம் என உள்துறை அமைச்சரை மேற்கோள்காட்டி சுவீடன் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.