ஜெனீவா தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சரியான புரிதல் இல்லையோ என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சிகளின் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.யுத்தகுற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் வேவ்வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி சர்வதேச விசாரணைகளை நிராகரித்துள்ளார். ஆனால் பிரதமர் தனது சமீபத்திய கருத்துக்களில் அதனை நிராகரிக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் இருவரும் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுவது புலனாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.