நாற்காலி சூடாகி விட்டது என்றால், நாற்காலியில் மூட்டை பூச்சிகள் இருக்குமாயின் அவற்றை கொல்லாது வேறு நாற்காலி ஒன்றை தேடிக்கொள்வது மிகவும் பொருத்தமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொத்து கோழிக்கு எந்த கூடும் ஒன்று என்பதால், நான் எப்போதும் அஞ்சவில்லை. அத்துடன் எனது பயணத்தை நிறுத்த முடியாது.
பெறாமை, பாசாங்குத்தனம், பகை என்பவற்றை கவனத்தில் கொண்டு செயற்படுவோமேயானால், நமக்கு பயணம் என்று ஒன்றிருக்காது. நாட்டின் தலைவராக இருந்தாலும் அறநெறி பாடசாலையை கொண்டு அறத்தை கற்றுக்கொள்வது பொருத்தமானது.
பௌத்த பிக்குமாருடனும் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுபவர்களுடனும் பழகுவது நாட்டை ஆட்சி செய்பவர்களுடன் பழகுவதை விட சிறந்தது. இப்படி நடந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்படாது. எனினும் கட்சி என்ற வகையில், தலையில் கழுவினால், பிரிந்து செல்வோருக்கும் இணைந்து கொள்ள இடம் இருக்க வேண்டும்.
நாட்டு மக்கள் கடன் சுமையில் இறுகியுள்ளனர். லீசிங் நிறுவனங்கள் அப்பாவி மக்களை சுரண்டி சாப்பிடுகின்றன. இப்படியான மக்களை பாதுகாக்க நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.