2025ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டில் சகலருக்கும் வீடுகள் வழங்கி வைக்கப்படும் : சஜித் !

SAMSUNG CSC

அஷ்ரப் ஏ. சமத்

இந்த நாட்டில் உள்ள சிலா்  அரசியல் இலாபம் கருதி இனத்துவேசங்களை கிளா்ப்பி அதன் ஊடாக அரசியல் அதிகாரத்துக்கு வர எத்தனிக்கின்றனா். ஆனால் இந்த நாட்டில் வாழும் 200 இலட்சம் மக்கள் மேடையா்கள் என அவா்கள் என்ணியுள்ளாா்கள். இவா்களது இந்த இனரீதியான இந்த சிந்தனைக்கு இந்த
நல்லாட்சியினை ஏற்படுத்தியவா்களான நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. சிங்கள
லே தமிழ் லே முஸ்லீம் லே எனவும் பிரித்துப்  பாா்த்து மீண்டும் ஒரு யுத்ததினை ஏற்படுத்த சில பௌத்த குருமாா்களை உசுப்பிவிடுகின்றனா்.  என அமைச்சா் சஜித் பிரேமதாச உரையாற்றினாா்

கொழும்பு மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச
ஆட்சிக்காலத்தில்   நிர்மாணிக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபையின் வீடுகளில் வாழ்ந்து வருகின்ற  2500க்கும் மேற்பட்ட
குடும்பங்களுக்கு இன்று (28)ஆம் திகதி  கொழும்பு விகாரமாகதேவி
உள்ளரங்கில் வைத்து வீடுகளுக்கான  (உறுதி )வீட்டுரிமைப் பத்திரங்கள்
வழங்கி வைக்கப்பட்டது.  இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

SAMSUNG CSC
இந் நிகழ்வில்  பிரதியமைச்சா் எரான் விக்கிரமசிங்க, பாராளுமன்ற
உறுப்பிணா்கள் எஸ்.மரிக்காா், முஜிபு ரஹ்மான், கொழும்பு மாநரக முதல்வா்
ஏ.ஜே.எம் முசம்மில், மேல்மாகாண சபை உறுப்பிணா் மொஹமட் பாயிஸ் மற்றும்
அரசியல் பிரநிதிகளும் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு தொடா்ந்து உரையாற்றிய  அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றும்போது.-

SAMSUNG CSC
இந்த இனவாதத்தைினை துாண்டும் அரசியல் வாதிகள்   இந்த நாட்டில் வாழும்
பொளத்த மக்கள்  அனைவரும் மோடையா்கள் என நினைத்துக் கொண்டுள்ளனா்.  ஆனால்
தற்கால . மக்கள்  சிறந்த புத்தியுள்ளா்வா்கள்  இனங்களை பிரித்து அரசியல்
இலாபம் தேடுபவா்களை  நிராகரிப்பாா்கள்.  இந்த நாட்டில்  வாழும் சகல இன
மக்களையும் அனைத்து சகலரும் இந்த நாட்டின் பிரஜைகள்  என்ற சிந்தனையில்
தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை ஆதரித்தாளாா்கள். இந்த சிந்தனையில்
இந்த இனவாதிகள்  செயல்பட்டால் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவா்கள் 2000 ஆம் ஆண்டளவில் சகலருக்கும்
வீடு” என்ற யோசனையை முன்வைத்தாா். அதற்கு முன் அவா் அகால மரணமடைந்ததால்
அந்த யோசனை முற்றுப் பெறவில்லை. ஆகவே தான்    எனது ஆலோசனையின் கீழ்
2025ஆம் ஆண்டாகும்  போது இந்த நாட்டில் வீடில்லாத குடும்பங்கள்
சகலருக்கும் வீடுகள் வழங்கி வைக்கப்படும்.  இத்திட்டத்திற்காக அரசிடம்
நிதி இல்லாவிட்டாலும் உலகில் எந்த நாடுகளுக்காவது சென்று  பிச்சை
கேட்டாவாது இந்த திட்டத்தினை அமுல்படுத்துவேன். எனது தந்தையும் ஜக்கிய
நாடுகள் அமையத்தில் உலக குடியிருப்பு தினத்தினை ஸ்தாபித்து வெளிநாடுகளில்
நிதி பெற்றுத்தான் இவ் வீடுகள் அமைத்தாா்.

SAMSUNG CSC
அடுத்த வாரம் நடைபெற உள்ள அமைச்ரவையில் கொழும்பு மாவட்டத குறைந்த மற்றும்
நடுத்தர  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் ஓசியன் வியு
கம்பணியும் இணைந்து கொழும்பில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை பத்திரம்
சமா்ப்பிக்கப்படும்.  அதன் பின்னா் நிதியமைச்சில் இருந்து நிதி
பெறப்பட்டு இத்திட்டம் கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவா்கள் 2000 ஆம் ஆண்டளவில் சகலருக்கும் வீடு
என்ற யோசனையை முன்வைத்தாா். அதற்கு முன் அகால மரணமானா்  எனது யோசனையின்
கீழ் 2025ஆம் ஆண்டாகும்  போது இந்த நாட்டில் சகலருக்கும் வீடுகள் வழங்கி
வைக்கப்படும்.  இத்திட்டத்திற்காக அரசிடம் நிதி இல்லாவிட்டாலும் உலகில்
எந்த நாடுகளுக்காவது சென்று பிச்சை கேட்டாவாது இந்த திட்டத்தினை
அமுல்படுத்துவேன்.

SAMSUNG CSC
அடுத்த வாரம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் ஓசியன் வியு
கம்பணியும் இணைந்து கொழும்பில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை பத்திரம்
சமா்ப்பிக்கப்படும்.  அதன் பின்னா் நிதியமைச்சில் இருந்து நிதி
பெறப்பட்டு இத்திட்டம் கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும்.