மேலும், விமல் வீரவன்சவின் கட்சியும் உதய கம்மன்பிலவின் கட்சியும் இன மத பேதத்தைத் தூண்டி அரசியல் நடத்தி வருகின்றது எனவும் அவர்களின் இரு கட்சியும் சுதந்திரக்கட்சியின் வாக்குகள் மூலமே பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் குற்றம் சாட்டினார்.
விமல் வீரவம்ச நேற்று நடத்திய ஊடக சந்திப்பில், சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் சிலர் தங்களோடு இணைந்து கொள்வதாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களை ஏற்ற நேரத்தில் வெளியே கொண்டு வருவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சுதந்திரக்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இருக்கும்வரை எந்தவொரு உறுப்பினரையோ அல்லது கட்சியையோ பிளவுபடுத்த முடியாது.
அதனால்தான் புதிய கட்சியை அமைப்பேன் எனத் தெரிவித்து மகிந்தவை சார்ந்தவர்களோடு சேர்ந்து விமல் வீரவன்ச இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
புதிய கட்சியை அமைப்பதனால் இவர்களுக்கோ அல்லது அவர்களோடு இணைபவர்களுக்கோ எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. மாறாக இன்னும் ஒரு பெரும்பான்மைக் கட்சியே வலுவடையும்.
கட்சி என்பது ஒருவருடையது அல்ல மாறாக கட்சி மக்களுடையது என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.