ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, 13ம் தரநிலை ஜோடியான ஜூலியா ஜார்ஜஸ்-கரோலினா பிளிஸ்கோவா ஜோடியை எதிர்கொண்டது.
துவக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சானியா ஜோடி 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் செக் குடியரசின் ஆண்ட்ரியா ஹலவாக்கோவா-லூசி ஹிராடெக்கா ஜோடி, 3-6, 6-3, 6-1 என்ற செட்கணக்கில் சீனாவின் சூ யிபான்-செங் ஜோடியை வென்றது.
எனவே, சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆண்ட்ரியா ஹலவாக்கோவா-லூசி ஹிராடெக்கா ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.