ஞானசார தேரர் ,சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி !

Bodu Bala Sena
 பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு முதல் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.