வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்க வேண்டுமாயின் அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை ஏற்பட வேண்டியது அவசியமானது.
2011ம் ஆண்டில் பல நிறுவனங்களை அரசாங்கம் கையகப்படுத்தியிருந்தது. அதற்காக குறித்த நிறுவனங்களுக்கு எவ்வித நட்டஈட்டையும் அப்போதைய அரசாங்கம் வழங்கவில்லை. இதனால் நம்பிக்கையற்ற நிலைமை காணப்பட்டது.
நாடு என்ற ரீதியில் நாம் வேறும் நாடுகளுக்கு பொய் சொல்ல முடியாது.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவை ஒப்பந்தம் மூலம் எமது தொழில்சார் நிபுணர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை.
இது தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
உலகின் முதனிலை முதலீட்டாளர்கள் இன்று இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
உலகின் பொருளாதார நிபுணர்கள் இன்று எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.