வரும் 9ம் திகதி இறுதி ஆட்டம்!

mice-na-ragbyமணி­லாவில் அமைந்­துள்ள பிலிப்பைன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும் ஆசிய 5 நாடுகள் முதலாம் பிரிவு றக்பி (ஆசிய வல்­லவர்) இறுதி ஆட்­டத்தில் பிலிப்­பைன்ஸை எதிர்த்­தா­டு­வ­தற்கு இலங்கை தகு­தி­பெற்­றுள்­ளது.

இதற்கு முன்­னோ­டி­யாக நேற்று நடை­பெற்ற முத­லா­வது அரை இறுதிப் போட்­டியில் கஸகஸ்­தானை எதிர்­கொண்ட இலங்கை அணி 35 (3 கோல்கள், 1 ட்ரை, 3 பெனல்­டிகள்) க்கு 14 (2 கோல்கள்) என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் அபார வெற்­றி­பெற்­றது. இலங்கை சார்­பாக தனுஷ்க ரஞ்சன் 2 ட்ரைக­ளையும் துலாஜ் அச்­சல பெரேரா, லவங்க பெரேரா ஆகியோர் தலா ஒரு ட்ரையையும் வைத்­தனர்.

இவற்றில் 3 ட்ரைக­ளுக்­கான மேல­திகப் புள்­ளி­களை ரீஸா முபாரக், கான்ச்­சன ராம­நா­யக்க ஆகியோர் பெற்­றுக்­கொ­டுத்­தனர். அத்­துடன் துலாஜ் பெரேரா, ரீஸா முபாரக், கான்ச்­சன ராம­நா­யக்க ஆகியோர் தலா ஒரு பெனால்­டியை இலக்கு தவ­றாமல் உதைத்­தனர்.

இவர்­களை விட நேற்­றைய போட்­டியில் இலங்கை அணியில் ஹென்றி டெரன்ஸ், கிஷோர் ஜெஹான், சோன் விஜே­சிங்க, சுஹிரு அன்­தனி, ஷாரோ பெர்­னாண்டோ, புவ­னேக்க உதங்­க­முவ, ரொஷான் வீர­ரட்ன, அணித் தலைவர் ஃபாஸில் மரிஜா, சந்துன் ஹேரத், டிமித்ரி ஷெஹான் ஆகி­யோரும் இடம்­பெற்­றனர்.

இதே­வேளை நேற்று நடை­பெற்ற மிகவும் இறுக்­க­மான இரண்­டா­வது அரை இறு­தியில் 20 க்கு 17 என்ற புள்­ளிகள் கணக்கில் சிங்­கப்­பூரை பிலிப்பைன்ஸ் வெற்­றி­
கொண்­டது. இலங்கைக்கும் பிலிப் பைன்ஸுக்கும் இடையிலான இறுதி ஆட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.