சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள, சுகாதார அதிகாரிகளும் உதவி!

 

share-kidney-failure
இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள, சுகாதார அதிகாரிகளும் உதவியதாக இந்தியாவில் இருந்து இந்த சட்டவிரோத விற்பனையை முன்னெடுத்தவர் சாட்சியமளித்துள்ளார்.

இந்தியாவின் அஹமதாபாத்தில் இருந்து சுமார் 60 பேரை இலங்கைக்கு அனுப்பி சிறுநீரக மாற்று விற்பனையை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுரேஸ் பிரஜாபதி என்பவர் இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

இந்தியாவை காட்டிலும் சிறுநீரக சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும்போது இலங்கை சட்டசிக்கல்கள் இருக்கவில்லை. இதன்காரணமாகவே அங்குள்ள மருத்துவனை ஒன்றில் இந்த விற்பனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை சட்டத்தின்படி சிறுநீரக விற்பனையின் போது வைத்தியசாலையின் அதிகாரம் பெற்ற மூன்று பேரடங்கிய குழுவின் அங்கீகாரம் தேவை, இதனை தவிர சிறுநீரகத்தை அன்பளிப்பவரின் சுய அனுமதி தேவை. 

இந்தநிலையில் இலங்கையின் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவரும், அரசாங்க மருத்துவமனையின் இரண்டு வைத்தியர்களும் இந்த குழுவில் அங்கீகாரக்குழுவில் இடம்பெற்றிருந்தாக சுரேஸ் தெரிவித்துள்ளார்

சுரேஸின் தகவல்படி சிறுநீரக விற்பனையாளர்கள், குறித்த அதிகாரக்குழுவுக்கு ஒரு சிறுநீரகத்துக்காக 500 டொலர்களை (33 ஆயிரம் இந்திய ரூபாய்கள்) வழங்கினர்

இதனை தவிர, சிறுநீரக விற்பனை ஏற்பாட்டாளருக்கு 30 லட்சம் ரூபா வழங்கப்பட்டது. இலங்கையில் உள்ள வைத்தியசாலை நிர்வாகத்துக்கு 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டது. 5 லட்சம் ரூபா வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் இந்தியாவில் 5 முதல் 10 பேரடங்கிய குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இந்தக்குழுவினருக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள் நான்கு வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் சிறுநீரக தானத்தில் ஈடுபடுவர்களுக்கு தங்குமிட மற்றும் அனைத்து வசதிகளும் இலங்கையில் செய்துக்கொடுக்கப்பட்டதாக சுரேஸ் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.