இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் பனிப்புயல் !

 

Unknown

வழக்கமாக குளிர் காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது.

தைவான், ஜப்பான், சீனா, தென்கொரியா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் தட்பவெப்ப நிலை மிகவும் குறைந்து பனிகொட்டுகிறது. தைவானில் தலைநகர் தைபேயில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 4 டிகிரி செல்சியஸ் ஆக தட்பவெப்ப நிலை மாறியுள்ளது.

இதனால் ஏற்பட்ட கடும் குளிரால் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறலால் 40 பேர் பலியாகி உள்ளனர். நியூ தைபே நகரில் 17 பேர் ஆக மொத்தம் 57 பேர் பலியாகியுள்ளனர்.

அதேபோன்று ஜப்பானில் மேற்கு மற்றும் தென்பகுதியில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விபத்துகளில் இறந்துள்ளனர்.

சீனாவிலும் இந்த ஆண்டு கடும் குளிர் வாட்டுகிறது. தென்பகுதியில் உள்ள யோங்ஷு நகரில் 1963–ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் கடும் குளிர்காற்று வீசுகிறது. இங்கு மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர்.

தென்கொரியாவில் தலைநகர் சியோலில் மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இதனால் அங்குள்ள ஜெஜு தீவில் 4.7 இஞ்ச் அளவுக்கு பனிகொட்டிக் கிடக்கிறது. அங்கு விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் கடும் பனிக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.