பெரும்போகத்திற்கு முன்னர் சேதமடைந்துள்ள குளங்கள் புனரமைக்கப்படும்!

images

அடுத்த பெரும்போகத்திற்கு முன்னர் சேதமடைந்துள்ள குளங்கள் புனரமைக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளங்களை புனரமைப்பதற்கு மூவாயிரத்து 300 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைமை பொறியியலாளர் பிரபாத் வித்தாரன குறிப்பிட்டுள்ளார்.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நிலவிய கடும் மழை காரணமாக சுமார் 300 க்கும் அதிகமான குளங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இதனை தவிர ஏறிகள் மற்றும் நீர்பாசன திட்டங்களும் சேதமடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளங்களின் புனரமைப்பு பணிகளின் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா பகுதிகளில் சேதமடைந்துள்ள குளங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.