செயிட் ஆஷிப்
தேசிய ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையில் விசேட நிகழ்வு நடைபெற்றது.
மாநகர சபை முன்றலில் ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் உடல் ஆரோக்கியம் தொடர்பிலான சுகாதார அமைச்சின் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் அது தொடர்பிலான அறிவுரை ஆணையாளரினால் நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநகர சபை முன்றலில் இருந்து நகர நெடுஞ்சாலை ஊடாக சுமார் 500 மீட்டர் வரையான தூரம் நடைப் பயிற்சியும் இடம்பெற்றது.
இதில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், பொறியியலாளர் சர்வானந்தன், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.