அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிக்க காலக்கெடு விதிப்பு !

அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
lead-Elections-Commissioner-Press

இதற்கேற்ப இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட கட்சியின் வரவு செலவுக் கணக்கை எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு கிடைத்த வருமானம், அவை செலவழிக்கப்பட்ட முறை குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் கணக்கு அறிக்கையில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

கடந்த வருடத்திற்கான வரவு செலவுக் கணக்கை எதிர்வரும் 29ம் திகதிக்குள் சமர்ப்பிக்கத் தவறும் அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்துச் செய்ய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.