இந்தியா-பிரான்ஸ் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து !

1033274-modi-1453616296-439-640x480

3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே இந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்க பிரான்ஸ் உதவி செய்யும் என தெரிவித்துள்ளார். 

இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மாநாடு இன்று நடந்தது. இதில், இருநாடுகளுக்கு இடையே ஊரக வளர்ச்சி, சுத்தமான எரிசக்தி, ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட பிரான்ஸ் ஆர்வமுடன் இருப்பதாகவும், இந்தியாவில் சண்டிகர், நாக்பூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்குவதில் பிரான்ஸ் உதவி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் அதிபர் ஹோலண்டே உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே ஏற்கனவே, பிரதமர் மோடியின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு 2.25 பில்லியன் டாலர்கள் கடனுதவியை வழங்குவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.