ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த முதல் இங்கிலாந்து இளைஞன் !

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த முதல் இங்கிலாந்து வெள்ளையின இளைஞன் என்ற பெயரை பெற்றுள்ளான் 20 வயதே ஆன ஜாக் லேட்ஸ்.

01_nh24isi_1206984k

இங்கிலாந்து செய்திதாள் வெளியிட்டுள்ள செய்திப்படி கிறிஸ்துவரான ஜாக், இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு, உருது படிக்க போவதாக கூறிவிட்டு குவைத் சென்றுள்ளார். அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. பிறகு கடந்த 2014-ம் ஆண்டுதான் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும், சிரியாவில் இருப்பதாகவும் தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் தனது பெயரை இப்ராஹிம் என்று மாற்றிக்கொண்டு ஒரு ஈராக்கை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் படிக்கும்போது படிப்பில் சுட்டியாகவும், கலகலப்பானவராகவும் இருந்ததாக அவரது பள்ளி கால நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஜிகாதி ஜான் என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து குடியுரிறுமை பெற்ற ஐ.எஸ். தீவிரவாதியை போல ஜாக்கின் நண்பர்கள் அவரை ஜிகாதி ஜாக் என்ற பட்ட பெயரிட்டு அழைக்கிறார்கள்.

ஜாக் தற்போது கடும் சண்டை நடைபெற்றுவரும் சிரியாவின் ராக்கா நகரத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.