தென் கொரியாவின் பிரபல சுற்றுலா தீவான ஜிஜூ தீவில் உள்ள விமான நிலையம் கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் தீவில் உள்ள மலைகளில் 1 மீட்டர் அளவிற்கு பனி படர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று 296 விமான சேவைகள் ரத்து செய்யபட்டது. மேலும் 122 விமானங்கள் வர தாமதமானது. இதனால் இன்று திட்டமிடப்பட்டிருந்த 517 விமானங்கள் மற்றும் நாளை இயக்க திட்டமிடப்பட்டிருந்த 60 விமாங்களும் இரண்டாவது நாளாக தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.