அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி பலியானவர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு !

அமெரிக்காவில் குளிர் காலம் தொடங்கி விட்ட நிலையில் அங்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசுகிறது. அங்கு மழை போன்று பனி கொட்டுகிறது. இதனால் வீடுகளில் கூரைகள், தெருக்கள் மற்றும் ரோடுகளில் பனி மூடிக் கிடக்கின்றன. சுமார் 4 அடி உயரத்துக்கு பனி கொட்டிக் கிடக்கிறது.

5686657-large

பனிப்புயல் வேகமாக வீசுவதால் ரோடுகளில் கொட்டிக் கிடக்கும் பனியில் வாகனங்கள் ஓட்ட முடிய வில்லை. இதனால், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, தேவையற்ற பயணத்தை தவிர்க்கும்படி பொது மக்களை அரசு நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

கென்டக்கி, பென்சில் வேனியா, நிïயார்க், உள்ளிட்ட பல மாகாணங்களில் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது. வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை செயல்படவில்லை. எனவே, பால், ரொட்டி, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்கள் இதுவரை 19  பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயம் அடைந்துள்ளனர். பனிப்புயலுக்கு அமெரிக் காவில் 20 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் விமான நிலையம் மூடப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், டென்னிசே, ஜார்ஜியா, கென்டக்கி, வடக்கு கரோலினா, நியூஜெர்சி, வெஸ்ட் வெர்ஜினியா, மேரி லேண்ட், பென்சில் வேனியா, கொலம்பியா உள்ளிட்ட 11 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. இப்பகுதியில் வசிக்கும் 8 கோடியே 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.