கல்முனை மாநகர சபையில் மசூர் மௌலானாவுக்கு அனுதாபப் பிரேரணை நிறைவேற்றம்!

AM (15)_Fotorசெயிட் ஆஷிப்
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று சனிக்கிழமை மாநகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர முதல்வர் சட்டமுதுமானி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர், செனட்டர் மர்ஹூம் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா அவர்களின் மறைவுக்காக அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 
AM (10)_Fotor
இந்த பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி சமர்ப்பித்தார். அதனை எதிர்க் கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் வழிமொழிந்து உரையாற்றினார்.
அத்துடன் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, இசட்.ஏ.எச்.ரஹ்மான், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எச்.எச்.எம்.நபார், சி.எம்.முபீத், ஏ.எம்.றியாஸ், எம்.கமலதாசன் ஆகியோரும் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அனுதாபப் பிரேரணையை செனட்டர் மசூர் மௌலானாவின் பாரியார் மற்றும் பிள்ளைகளுக்கு அனுப்பி வைக்குமாறு முதல்வர் நிஸாம் காரியப்பர், சபைச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த சபை அமர்வைப் பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அதற்கான விசேட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் பிரகாரம் ஆசிரியரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.றம்ஸான் அவர்களின் நெறிப்படுத்தலில் சுமார் 100 மாணவர்கள் சபை நடவடிக்கைகளை முழுமையாக பார்வையிட்டனர்.
AM (8)_Fotor
முதல்வர் நிஸாம் காரியப்பர் இம்மாணவர்களுக்கான உபசரிப்பை மேற்கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கினார்.
இந்த சபை அமர்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்களும் முதல்வரின் விசேட அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் புதிய நிர்வாகப் உத்தியோகத்தராக கடமையேற்றுள்ள ஏ.முஹம்மட் ஆரிப் அவர்கள் இந்த அமர்வில் முதன்முறையாக சபைச் செயலாளராக கடமையாற்றினார்.