பதினைந்து நாடுகள், ஐநாவில் வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளன!

UN Logo
ஐநாவுக்கு செலுத்தவேண்டிய வருடாந்த நிதிப் பங்களிப்பை செலுத்தத் தவறிய பதினைந்து நாடுகள், ஐநாவில் வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளன.

தற்போது ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வெனிசுவேலாவும் அடங்கும். அந்நாடு மட்டும் ஐ நாவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி செலுத்த வேண்டியுள்ளது. 

வாக்களிக்கும் உரிமையை இழந்த மற்ற நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன், லிபியா, மாலி மற்றும் புரூண்டி ஆகியவை உள்ளன. 

ஐநாவின் தடைகள் கடந்த சனிக்கிழமை வரை விதிக்கப்பட்டிருந்த இரானும் வாக்களிக்கும் உரிமையை இழக்கவிருந்த நிலையில், தனது பங்களிப்பை தற்போது செலுத்தியுள்ளது.  

உள்நாட்டு போர் அல்லது கடும் வறுமையை எதிர்கொள்ளும் ஐந்து நாடுகள் பங்களிப்பு அளிக்கவில்லை என்றாலும் அவைகளுக்கான வாக்களிக்கும் உரிமையை ஐநா நீக்கவில்லை. 

அப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள் ஐந்து நாடுகளில் யேமன், சொமாலியா மற்றும் கினீ-பிஸ்ஸாவ் ஆகியவை அடங்கும்.