குதிரையிலிருந்து யானைக்கு தாவுகின்றார் அஸ்மி .எ.கபூர் ?

எஸ்.எம்.அஜூஹான்
 கடந்த அரசியல் ரீதியான நிலைமாற்றங்களின் போதும் அதன் பின்னரான நெருக்கடி நிலைகளின் போதும் தனிமனித அதிகாரத்திற்காகவன்றி தேசிய காங்கிரஸ் எனும் குரலை உயர்த்திய அதை அடிக்கடி பேசிய ஊடகங்களோடு தொடர்பற்றுக்கிடந்த கட்சியின் செயலாக்கத்திற்காக பல பங்களிப்புகளையும் ஊடக ரீதியாக செயற்படுத்தி வந்த இளம் மாநகர சபை உறுப்பினரான அஸ்மி ஏ கபூர் வேறு ஒரு கட்சிக்கு செல்லவிருப்பதாக அவருக்கு நெருக்கமான நன்பர் ஒருவர் தெரிவித்தார்.
azmy
 இவருடன் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பு கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும் அது தொடர்பில் கட்சியின் செயலாளர் ஊடாக சில நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பதாகவும் கட்சியை அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசத்தில் வலுப்படுத்தவும் சமுக நலன் தொடர்பில் பேசவும் முடியுமென்றும் கருத்து நிலவுகிறது.
இது தவிர  முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு யாருமில்லாமல் தள்ளாடிய போது அக்கரைப்பற்று மத்திய குழு செயலாளாரக இருந்து பல தரப்பட்ட தியாகங்கள் புரிந்த கட்சியின் ஆரம்ப போராளிகளில் ஒருவர், எந்தவொரு கட்சிக்கும் அவர் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள பட்சத்தில் இவர் தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிக்கு செல்வாரா? அல்லது அரசியல் இருந்து ஒதுங்குவாரா? ஓரிரு தினங்களுக்குள் முடிவு அறிவிக்கப்படுமென்பதில் மாற்றமில்லை.