அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் வேலைத்திட்ட அலுவலகத்தின் இணைப்பு அதிகாரி மேகன் பிளிப்ஸ், இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.