இந்த சந்திப்பு குறித்தோ, அதில் என்ன விடயங்கள் பேசப்பட்டன எனப்து குறித்தோ உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
எனினும் இந்த சந்திப்பின் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் கூறியிருப்பதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் தேசிய அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள புதிய அரசியலமைப்பு குறித்தும் அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இலங்கைக்கு உதவிகளை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக எரிக் சொல்ஹெய்ம் இதன்போது உறுதியளித்துள்ளதாகவம் கூறப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து டவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட உயர்மட்டக்குழுவினர் அங்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.