-பி.எம்.எம்.ஏ.காதர்-
வரலாற்று ஆய்வாளர் சம்மாந்துறை ஜலீல் ஜீ எழதிய கிழக்கிலங்கை இடப்பெயர் தொல்லியல் ஆய்வு, வேப்;பஞ்சோலை,முற்றத்து முகவரிகள் ஆகிய மூன்று நூல்களின்; வெளியீட்டு விழா அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் காரைதீவு சண்முகா மகாவித்தியலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் தலைவரும்,நூலாசிரியருமான ஜலீல் ஜீ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் பொதுச் செயலாளரும்,உதவிக் கல்விப்பணிப்பாளருமான விபுலமாமணி வீ.ரி சகாதேவராஜா நிழ்வுகளை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.வீரமுனை யுகதாரினி செசிலியா வரவேற்புப்பாடலைப் பாடி அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு மூன்று நூல்களையும் வெளியீட்டு வைத்தார். கிழக்கிலங்கை இடப்பெயர் தொல்லியல் ஆய்வு நூலின் முதற்பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.யஹியாகான், வேப்பஞ்சோலை வரலாற்று நூலின் முதற்பிரதியை சொர்ணம் குழுமத்தின் பிரதிநிதி எம்.பிரகாஷ், முற்றத்து முகவரிகள் நூலின் முதற்பிரதியை ஏ.எல்.எம்.காபுல் ஆஸாத் ஆகியோர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இங்கு வெளியீட்டுரையை கலாபூஷணம் கே.எம்.ஏ.அஸீஸ் நிகழ்த்தினார.; கிழக்கிலங்கை இடப்பெயர் தொல்லியல் ஆய்வு,வேப்பஞ்சோலை,முற்றத்து முகவரிகள் ஆகிய இந்த மூன்று நூல்கள் பற்றிய அறிமுகவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா நிகழ்த்தினார்.
கலாநிதி அனுஷியா சேனாதிராஜா நிகழ்திய மூன்று நூல்கள் பற்றிய அறிமுகவுரை
கிழக்கிலங்கை இடப்பெயர் தொல்லியல் ஆய்வு நூல் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஊர்களின் பல்வேறு பெயர்களை நூலாசிரியர் தன்னுடைய ஆய்விலே சேர்த்திருக்கின்றார்.
இந்த ஆய்வு நூலை நாங்கள் ஆராய்கின்றபோது இந்த கிராமங்களின் பெயர்கள் எவ்வாறு உருவாகின மக்கள் ஏன் பெயர்வைத்தார்கள் என்பதை பற்றி ஆராய்ந்திருக்கின்றார். ஒரு பல்கலைக்கழகத்திலே எவ்வாறு ஒரு நூலை ஆய்வு செய்கின்றார்களோ அவ்வாறே இவரும் ஆய்வு செய்திருக்கின்றார்.இடங்களின் பெயர்களை அழகாக வகைப்படுத்தியிருக்கின்றார்.
இரண்டாவது நூல் வேப்பஞ்சோலை இந்த நூல் ஒரு சிறப்பான இடத்தைப்பற்றியது புதிய வளத்தாப்பிட்டி என்ற பிரதேசத்திலே மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் அவர்கள் எதிர் கொண்ட துன்பங்கள் .துயரங்கள் இன்னல்கள் எவ்வாறு அமைந்தது அம்மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள் துயரங்கள் அவர்களின் இடம் பெயர்வு போன்ற அம்சங்களையும் இந்நூல் கொண்டிருக்கின்றது.
மூன்;றாவது நூல் முற்றத்து முகவரிகள் அம்பாறை மாவட்டத்திலே உள்ள பெண் எழுத்தாளர்கள் பெண்கள் எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களையும் சமூக மேம்பாட்டுடன் தொடர்பு பட்ட விடயங்களையும் கவிதைகள் மூலமாக வெளிக் கொண்டுவந்திருக்கின்றார்கள்.இந்த பெண் எழுத்தாளர்களின் ஆற்றல்களைப் பார்க்கின்ற போது அவர்களுக்கு சமூகத்திலே காணப்படகின்ற அந்தஸ்த்து எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பது வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது.ஆகவே இந்த முற்றத்து முகவரிகள் முக்கிய நூலாகக் காணப்படுகின்றது.
சமூக மேம்பாட்டுக்கு பெண்கள் சமத்துவம் பெண்கள் சமநிலை சமூக அந்தஸ்த்து போன்ற பல்வேறு விடையங்களை நாங்கள் பார்க்கின்ற போது அவர்களுடைய எழுத்துக்கள் படைப்புக்கள் திறமையாக்காணப்படுகின்றன சமூகத்திலே நீண்டு நிலைக்கக்கூடிய சமூக அபிவிருத்தியை நாங்கள் எதிர்நோக்கி இருக்க வேண்டுமானால் பெண்களுடை அந்தஸ்த்து சமமாக இருக்க வேண்டும் என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கே.தங்கேஸ்வரி நிகழ்திய கிழக்கிலங்கை இடப்பெயர் தொல்லியல் ஆய்வு நூலின் மதிப்பீட்டாய்வுரை
தொல்லியல் துறை என்பது நான்கு வருடப் பட்டப்படிப்பாகும் இதில் தொல்லியல் வரலாறு,கோட்பாடு நடைமுறைகள், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை,வரலாற்றுக்கு முற்பட்ட காலம்,நானியவியல்,ஆய்வியல்,ஒரு இடத்தைப்பற்றி அறிக்கை,மீயூசியத்திலே செய்யப்படுகின்ற நடைமுறை என் எல்வேறு விடையங்களை உள்ளடக்கி தகுந்த ஆதாரங்களுடன் செய்வதுதான் உண்மையான தொல்லியலாகும்.
அந்த வகையில் கிழக்கிலங்கை இடப்பெயர் தொல்லியல் ஆய்வு நூல் மிகவும் சிறப்பான நூல் உண்மையிலேயே நூலாசிரியர் கனக்கத் தேடல் செய்திருக்கின்றார்.இந்த நூலிலே அறிமுகவுரை,விதப்புரை,மதிப்புரை இப்படி பல்வேறு உரைகள் இருக்கின்றன.அதிகமாக நாங்கள் பார்க்கின்றோம் நூல்களில் எல்லாம் இப்படியான உரைகள் தான் நிறைய வருகின்றது அந்த வகையிலே இந்த நூலிலும் சில உரைகள் இருக்கின்றன.
நூலின் அறிமுகத்திலே நூலாசிரியர் சொல்கிறார் நாடோடி வாழ்க்கையில் இருந்து பழங்கடி மக்கள் காலம் செல்லச் செல்ல அவர்களுடைய தேவைகளும் ஒழுங்குகளும் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டு ஒர் இடத்திலே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது அவர்;கள் இருந்த பழைய இடங்களை பிரித்துக்காட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது அந்த நேரத்திலேதான் இந்த இடப் பெயர் தோன்றுகின்றது.என்று நூலாசிரியர் சொல்லுகின்றார்.அது ஏற்கத்தக்கது ஏன்னென்று சொன்னால் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் பிறகு இடத்தைச் சுட்டிக்காட்டுவதற்கா இப்படியான பெயர்களை ஏற்படுத்திக் கொண்டான்.
என்று பல்வேறு தகவல்களை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கின்றார் அந்த வகையிலே இந்த நூலை வாங்கிப்படித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்று சொன்னால் தற்போது பல இடங்கள் சிங்கள மயமாகிக் கொண்டிருக்கின்றது ஆகவே இது பயனுள்ள நூலாகக் காணப்படுகின்றது.
தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா நிகழ்த்திய வேப்பஞ்சோலை வரலாற்று நூலின் மதிபீட்டாய்வுரையை
இந்தக் காலம் நமக்கு மிக மகிழ்ச்சியான காலம் என்று நினைக்கின்றேன் இந்தப் பிரதேசத்திலே பதினொரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தன்; மூலம் நமக்குள்ளே மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருந்த இனப்பிரள்வின் அடையாளம் மறைந்து நாம் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு நின்ற காலம் இந்த டிசம்பர் மாதம்.
அதே போன்று இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது இந்த எழுத்தாளர் பேரவையின் மூலம் இந்தப் பிரதேசதினுடைய தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்த்து தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்ற காலமாக இருக்கின்றது.அது மாத்திரமன்றி இந்தப் பிரதேசத்திலே கடந்த மூன்று நாடகளாக வௌ;வேறு இடங்களில் நூல்கள் வெளியீட்ட வைக்கின்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஏதோ ஒருவகையில் நாங்கள் ஒன்று படவேண்டும் பேச வேண்டும் நமக்குள் இருக்கின்ற அறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கின்றது.இந்த சூழ்நிலையில் தான் வேப்பஞ்சோலை என்ற கிராமத்தைப் பற்றிய அறிமுகத்தை இந்த நூலின் மூலம் செய்து காட்டியிருக்கிறார்.
கலாநிதி பரதன் கந்தசாமி முற்றத்து முகவரிகள் நூலின் மதிபீட்டாய்வுரையை நிகழ்த்தினார்.
இங்கு வெளியிடப்பட்ட முற்றத்து முகவரிகள் கவிதை நூலில் கவிதைகளை எழுதிய கவிதாயினிகளான முபீதா உஸ்மான்,மாஜிதா தவ்பீக்,கலைமகள் ஹிதாயா,எம்.எஸ்.பழீலா உம்மா,வீரமுனை செஸ்லியா,சுல்;பிகா சரிப்.சபீனத்துன் நுஹா,பரீதா இஸ்மாயில்,பற்றூர் பரமேஸ்வரி,சப்னா அமீன்,மருதமுனை ஹரீpஷா சமீம் ,றமீசா நௌசாத்,ஏ.முபிதா,அனுஷா அஸீஸ்,சுஜாலினி,கலைவாணி பிபாகரன்,பௌசியா அலியார்,திருமதி முருகமூர்த்தி,டாக்டர் புஸ்பலதா, எம்.எஸ்.றஸ்மியா ஆகியோருக்கு பிரதம அதிதியால் ‘மேம்பாட்டாளர் விருது 2015’மற்றும் சாண்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் பெரும் அளவிலான தமிழ்,முஸ்லிம் எழுத்தாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.