சுலைமான் றாபி
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைகளை அபிவிருத்தி செய்யும் நேக்கில் திவிநெகும திணைக்களத்தின் மூலமாக வாழ்வாதார உதவிப் பொருட்கள் நேற்றைய தினம் (22) வழங்கி வைக்கப்பட்டன.
நிந்தவூர் பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம் எம். அச்சி முகம்மது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எம்.எம். அன்சார், உதவிப் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. எம். சுல்பிகார் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், பிரதியமைச்சரினால் மக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் இத்திட்டத்தின் மூலம் மக்கள் உச்ச பயன்களை பெறும் வகையில் கைத்தொழில் செய்வதற்கான ‘சிறு கைத்தொழில் மூலாதார’ உதவி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வுற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வசதிகளை செய்யும் சிறந்த சூழழும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.