பி.எம்.எம்.எ.காதர்
பெரிய நீலாவணை அக்பர் சமூக ஒன்றியத்தின் அனுசரணையில் பெரிய நீலாவணை அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கை நிலையம் நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பு நிகழ்வும் நாளை சனிக்கிழமை(23-01-2016மாலை பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கலந்து கொள்ளவுள்ளார்;.
இங்கு அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கையை நிலைய மாணவர்கள் 45 பேர்களுக்கிடையில் ஆறு பிரிவுகளாக நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் 6 பிரிவுகளிலும் முதல் இடங்களைப் பெற்ற ஆறு மாணவர்களுக்கும்; நினைவுச் சின்னமும்,பரிசுப் பொதியும் வழங்கப்படவுள்ளது.
மேலும் 6 பிரிவுகளிலும் 2ஆம்,3ஆம் இடங்களைப் பெற்ற 12 மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசுப் பொதிகளும்,ஏனைய 27 மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
இதில் மற்றுமொரு நிகழ்வாக இஸ்லாமிய நாகரீகத் துறையில் கலாநிதிப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அறபுக் கல்லூரி முதல்வரும்,மருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையத்தின் தலைவருமான கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.
இங்கு விஷேட விருந்தினர்களாக உலமாக்கள், கல்வியலாளர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள்,ஊர்பிரமுகர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.