கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை !

IMG_7048_Fotor

 

ஹாசிப் யாஸீன்

 

 கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தினை நவீன முறையில் அபிவிருத்திசெய்வதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்;.எம்.ஹரீஸ்முன்னெடுத்து வருகின்றார்.

இம்மைதான அபிவிருத்திற்கான திட்ட வரைபடங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் நிபுணத்துவக்குழுவான சீ.ஈ.சீ.வீ நிறுவன பொறியியலாளர் குழுவினர் தயாரித்துள்ளதுடன் இவ்வரைபடங்களுடன்கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில்இந்நிபுணத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (19) சென்று பார்வையிட்டுள்ளனர்.

IMG_7063_Fotor

இதன்போது இம்மைதானத்தினை 400 மீற்றர் மைதானமாக வடிவமைத்தல், நீச்சல் தடாகம் மற்றும் உள்ளகவிளையாட்டரங்கு நிர்மாணம், வடிகாலமைப்பு திட்டம், வாகன தரிப்பிடம் நிர்மாணம் என்பன பற்றிநிபுணத்துவக் குழுவினர் வரைபடங்களுடன் பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸூடனான இவ்விஜயத்தின் போது சீ.ஈ.சீ.வீ நிறுவனத்தின் உதவிப் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் தம்மிக்க தர்மவர்தன, சிரேஷ்ட படவரைஞர் பிரனீத் அமரதுங்க,  திட்டமுகாமையாளர் பொறியியலாளர் அகில ரங்க பண்டார, தென்கிழக்கு உதவி பொது முகாமையாளர்பொறியியலாளர் சரித் குணதிலக, கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஏ.றிஸ்கான, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

IMG_7069_Fotor