அஷ்ரப் ஏ சமத்
விளையாட்டு, உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரம் 25 – 30ஆம் திகதி வரை
நாடாலா ரீதியில் நடைபெறும். ஆரம்பவிழாவிலும் பாடசாலை விழாவிலும் பிரதம
அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து சிறப்பிப்பாா்.
ஆரம்ப வைபவம் ஜனவரி 25ஆம் திகதி காலிமுகத்திடலிலும், படசாலை
மட்டத்தில் ஜனவரி 26ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாய்க்க
மாகவித்தியாலயத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதியாகக்
கலந்து கொள்வாா்.
இன்று(21)ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா்
மாநட்டில் பிரதியமைச்சா் எச்.எம். ஹரீஸ் மேற்கண்ட தகவல்களைத்
தெரிவித்தாா். அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில் –
ஜனாதிபதி அவா்களின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால்
சமா்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கிணங்க 2016 ஜனவரி 25ஆந் திகதியில்
்இருந்து 30 ஆம் திகதி வரைக்கும் விளையாட்டு. உடல் நல மேம்பாட்டுத் தேசிய
வாரம் ஜனவரி 30ஆம் திகதி விளையாட்டு உடல் நல மேம்பாட்டு விசேட தினம்”
அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிணங்க ஜனவரி- மாதம் 25ஆம் திகதி அரச மற்றும் அரச சேவைகளில்
பணிபுரியும் நபா்களுக்கான விளையாட்டு உடல் ஆரோக்கிய தினம், ஜனவரி 26ஆம்
திகதி கல்வி, உயா் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் இளைஞா் விவகாரம்,
மற்றும் மகளிா் விவகாரம் விளையாட்டு மற்றும் உடல் ரோக்கிய தினம்,
ஜனவரி 27ஆம் திகதி சுகதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ விளையாட்டு
உடல் நல மேம்பாட்டு தினம், ஜனவரி 28ஆம் திகதி பாதுகாப்பச் சேவை மற்றும்
தனியாா் தொழில் முயற்சி விளையாட்டு உடல் நல மேம்பாட்டுத் தினம், ஜனவரி
29 ஆம் திகதி விளயைாட்டுக் கழகங்கள் அமைப்புக்கள் ஜனவரி 30ஆம் திகதி
விளையாட்டு உடல்நல மேம்பாட்டு விசேட தினமாகும்.
நாடு பூராக உள்ள கிராமிய, பிரதேச மாவட்ட மட்டங்களில் விளையாட்டு உடல்நலம்
தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் செயற்பாடுகள் மற்றும்
விளையாட்டுப்போட்டிகளை நடாத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக சகல அரச
தினைக்களங்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பட்டுள்ளதாகவும் இவ் விடயம்
சம்பந்தமாக விளையாட்டுத்துறை அமைச்சா் ஜயசிரி ஜயசேகர தலைமையில் ஏற்கனவே
ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடப்பட்டு இத் தேசிய தினங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதாக பிரதியமைச்சா் ஹரீஸ் தெரிவித்தாா்.
இந் நிகழ்வுகள் ஜனவரி 30ஆம் திகதி ஒவ்வொரு தோ்ால் தொகுதி பிரதேச மட்டம்
மாவட்ட மட்டத்தில் அந்தந்த பிரேதேச பாராளுமன்ற உறுப்பிணா் தலைமைகளில் இந்
நிகழ்வுகள் நடைபெறும்.
இலங்கை எதிா்காலத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாட்டுத்துறையில் சிறந்த
பயிற்சியாளா்களை உறுவாக்குவதற்கு 2020 ஒலிம்பிக், 2024, 2028ஆம்
ஆண்டுகளில் இலங்கை ஒலிம்பிக் பதங்கங்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை
வீரா்களை தயாா்படுத்துதலும் சிறந்த பயிற்சி விளையாட்டு மைதானங்களை
அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பெப்ரவரி 3ஆம் திகதி இந்தியாவில் நடைபெறும் சாக் நாடுகளின்
விளையாடடுப்போட்டியில் இலங்கை கலந்து கொள்ளும் அதற்காக இலங்கை
விளையாட்டுத்துறை அமைச்சா் தலைமையில் செல்ல உள்ளது. 5ஆம் திகதி உத்தியோக
பூர்வ வைபவம் நடைபெற உள்ளது.
வட கிழக்கில் தேசிய மட்டத்தில் உடற்பயிற்சி திட்டங்களை
அமுல்படுத்துவதற்கும் பயிற்சி நிலைங்கள் மைதாணம் அமைத்தல் போன்ற
வேலைத்திட்டங்களை அமுல்படுத்த அமைச்சின் அதிகாரிகள் அப்பிரதேசங்களுக்குச்
சென்று உரிய அறிக்கை சமா்ப்பிக்க உள்ளதாகவும் பிரதியமைச்சா் எச்.எம்.
ஹரீஸ் அங்கு தெரிவித்தாா்.
வட கிழக்கு மற்றும் அம்பாறை மாவட்ட விளையாடடுப் பயிற்சி நிலையங்கள் ,
அத்துடன் விளையாட்டு மைதானம் போன்ற அபிவிருத்திகள் பற்றியும்
ஊடகவியலாளா்கள் கேள்வி எழுப்பினா்.
எதிா்காலத்தில் அமைச்சின் செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில்
இப்பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சா் அங்கு
தெரிவித்தாா்.