முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸ நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 25ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸவால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வீடு ஒன்று தொடர்பாகவே ஷிராந்தியிடம் விசாரணைகள் செய்யவிருப்பதாக நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.