மாற்றமடையும் சூரிய வெளிச்சம் தற்போது முழு இலங்கைக்கும் கிடைத்துள்ளது: பிரதமர்

 

pongal_jaff_001
தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள்  வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார். 

உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்வாறு மாற்றமடையும் சூரிய வெளிச்சம் தற்போது முழு இலங்கைக்கும் கிடைத்துள்ளதுடன், அனைத்து இலங்கை பிரஜைகளும் தற்போது சூரிய வெளிச்சத்தை அனுபவிப்பதாக அவர் கூறினார். 

பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தது இருண்ட யுகத்தில் என்றும் சூரிய வெளிச்சம் இருக்கும் தற்போதைய சூழலில் இலங்கைக்கு வருகை தருமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். 

பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது என்றும் அவர் கூறியுள்ளார். 

எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலை சிறந்த மட்டத்தில் இருக்கும் என்றும் வடக்கு கிழக்கிற்கு ஒரு விசேட பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.