(வீடியோ) பாக்கிஸ்தான் நாட்டின் சிறந்த உற்பத்திபொருள் கண்காட்சியில் அமைச்சர் றிசாட் பதுர்டீன்….

 

கவர் போட்டோ-2_Fotor

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.

 

வீடியோ : கண்காட்சியின் காணொளி:- youtube.com/watch?v=HMxkzUUguTE&feature=youtu.be

பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகத்தினை உலகிற்கு எடுத்து காட்டும் வகையிலும் இலங்கை வர்த்தகத்திற்கும் பாக்கிச்தானின் வர்த்தகத்திற்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்தும் முகமாக 15.01.2016 வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின், ஸ்ரீமாவோ பண்டாரநாயக சாலையில் பாக்கிஸ்தானின்  சிறந்த உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும்  கண்காட்சியானது  உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு 17.01.2016 திகதி வரை தொடர்ந்து இடம்பெறும் பிரமாண்டமான இக்கண்காட்சியில் பாகிஸ்தானின் 110 முன்னணி நிறுவனங்களின் 400 கண்காட்சிக்கூடங்கள் பங்கேற்றுள்ளமை முக்கிய விடயமாகும்.

பாக்கிஸ்தானின் வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கைக்கான பாக்கிஸ்தானின் தூரகமும் ஒழுங்கு செய்து இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யித் சகீல் ஹுசைன் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதீதிகளாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், மற்றும் அபிவிருத்தி தந்ரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீர, பாக்கிஸ்தானின் வர்த்தக அமைச்சர் குர்ரம்தஸ் கிர்கான், பாக்கிஸ்தானி வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அதிகாரி எஸ்.எம்.முனீர் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

kjkj_Fotor

இக்கண்காட்சி சம்பந்தமாக  ஊடகவியலாளர்களிடம் தனது கருத்தினை தெரிவித்த அமைச்சர் றிசாத்  பதுர்டீன் அண்மையில் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீஃப் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணி விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தம் மற்றும் அரசியல் இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் முகமாக இவ்வாறான வர்த்தக கண்காட்சிகளை ஏற்படுத்துவது என்ற தீர்மானத்திற்கு அமைவாகவே முதற்கட்டமாக பாக்கிஸ்தானின் முதற்தரத்திலான உற்பத்தி பொருட்களின் வர்த்தக கண்காட்சியானது இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் றிசாட் பதுர்டீன் பாக்கிஸ்தானின் வர்த்தக துறைக்கும் இலங்கையின் வர்த்தக துறைக்கும் இடையிலான உறவினை எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பலமடையச்செய்யும் அதே நேரத்தில் இதே போன்று நமது நாட்டின் உற்பத்தி பொருட்களையும் பாக்கிஸ்தான் நாட்டில் காட்சிப்படுத்துவதற்காக   பாக்கிஸ்தான் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமையினை ஞாபகப்படுத்தினார்.

jhuy_Fotor