காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளராக கலாநிதி சிராஸ் !

unnamed

எம்.வை.அமீர்

கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளராக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாக நேரடி அரசியலில் பிரவேசித்த கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடந்த மாநகரசபைத் தேர்தலின்போது அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் முதல்வராக செயற்பட்டு கல்முனை மாநகரசபையின் முன்னேற்றத்துக்கு பல்வேறுபட்ட விதங்களில் உழைத்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவின் கீழ் குறித்த பதவியை இராஜினாமா செய்த கலாநிதி சிராஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை பெறும் நோக்கில் அக்கட்சியில் செயற்பட்டார். அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத இச்சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களின் வேண்டுகோளின் பெயரில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து அக்கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டார்.

unnamed