பிரித்தானியாவின் வௌிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள ஹியூகோ ஸ்வயர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவின் வௌிவிவகார அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
ஹியூகோ ஸ்வயர் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரனையும் சநதிக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவிலும் பிரித்தானியாவின் வௌிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் நாளை மறுதினம் காலி சாகித்திய விழாவிலும் ஸ்வயர் கலந்து கொள்ளவுள்ளார்.