ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் இருந்து பிரிந்து 2011–ம் ஆண்டு தெற்கு சூடான் நாடு உருவானது.
அதன் பிறகு நாட்டில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி படையினர் கடந்த 2 ஆண்டுகளாக போரிட்டு வருகிறார்கள். இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. அங்கு கிளர்ச்சி படையினர் பள்ளிகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இதுவரை 800 பள்ளிகள் தகர்க்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் சரியாக வேலைக்கு வருவதில்லை.
இதனால் 14 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி உள்ளனர். இது தெற்கு சூடானின் ஒட்டு மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் பாதியாகும். பள்ளிக்கு சென்றாலும் அவர்களுக்கு வகுப்பறைகளும் இல்லை. 4 லட்சம் மாணவர்களுக்கு வகுப்பறைகள் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் பெரிய அளவில் பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பது நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என ஐ.நா.சபையின் குழந்தைகள் கல்வி அமைப்பு கூறி உள்ளது.