பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் அருகில் குண்டுவெடிப்பு!

 

5c7fc390-fffa-4964-97e1-afc2da857da5_S_secvpf
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மையம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. குவாட்டா நகரில் அரசு நடத்தி வரும் போலியோ முகாம் அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். 

இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சிலர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

முதல் கட்டமாக போலியோ தடுப்பு குழுவின் உறுப்பினர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தினை சுற்றிவளைத்துள்ளனர். 

பலோசிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் தொடங்கி மூன்றாவது நாளில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் போலியோ முகாம் நடத்துவதற்கு தீவிரவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, முகாம்கள் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.