13ஆவது திருத்தம் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினையில் தோல்வி கண்டுவிட்டது : JVP !

13ஆவது திருத்தம் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினையில் தோல்வி கண்டுவிட்டது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் குற்பிபட்டுள்ளார். 
 
நாட்டில் தற்போது உள்ள அரசியலமைப்பு சர்வாதிகார அரசியலமைப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர்  புதிய அரசியலமைப்பில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படும் என்ற விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
tilvin_silva_jvp
 
அரசாங்கம் அனைத்தையும் மூடி மறைப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் 13 தோல்வி கண்டுவிட்டது என்றும் குறிப்பிட்டார். 
 
அரசியலமைப்பு தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை குசிப்படுத்த இயலாது என்றும் அது மூவின மக்களையும் சமவாய்ப்புக்களை வழங்குவதாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
தற்போதைய அரசியலமைப்பில் சிங்களம் அரச கரும மொழியாகும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் தமிழும் அரச கரும மொழியாகும் என்றே கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளை அரச கரும மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.