இந்தியக் குடியரசு தினத்தில் தமிழகத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை, விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை, இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்று, தமிழகத்தின் 6 மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து நாகப்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.