இலங்கைக்கு தற்போது எதிரி நாடுகள் எதுவுமில்லை : ஜனாதிபதி

President , maithri
இலங்கைக்கு தற்போது எந்த எதிரி நாடும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சகல உலக நாடுகளிடமும் தனது நட்பு கரத்தை நீடியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற சில நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவர் தமது நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். 

சிலி, செக் குடியரவு, டென்மார்க், கௌதமாலா, ஐவரிகோஸ்ட், கம்போடியா, ஈரான் ஆகிய நாடுகள் நியமித்துள்ள இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் சைப்ரஸ் நியமித்துள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர். 

இதனிடையே காலஞ்சென்ற புகைப்பட கலைஞர் வில்சன் ஹெகோட் நூற்றாண்டு ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களம் நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

நினைவு முத்திரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு கொழும்பு தேசிய ஆவண காப்பக திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. 

வில்சன் ஹெகோட் பிடித்த புகைப்படங்களின் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்.