பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி பதவி ஓய்வு பெறுவதையிட்டு இந்தப்பதவிக்கு 3 பேர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.விக்கிரமசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான பூஜித ஜயசுந்தர மற்றும் சீ.டி. விக்கிரமரத்ன ஆகியோருக்கிடையில் அடுத்த பொலிஸ் மா அதிபருக்கான பலத்த போட்டி நிலவுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனிற்கு அடுத்த நிலையில் மூத்த உயர் பொலிஸ் நிர்வாக சபையில் இருப்பவர் காமினி நவரத்ன ஆவார்.
1955ஆம் ஆண்டு பிறந்த இவர் 60 வயது பூர்த்தியடைந்த நிலையில், அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் மேலும் ஒருவருடத்திற்கு அதாவது எதிர்வரும் ஜுலை 21ஆம் திகதி வரை அவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தற்போதைய பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் காமினி நவரத்னவிற்கு அடுத்த நிலையில் இருக்கும் பொலிஸ் அதிகாரியான எஸ்.எம்.விக்கிரமசிங்கவே தற்காலிக பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.