றிசாத் ஏ காதர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பும் ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வும் 09.01.16 NFGG யின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
NFGG யின் கிழக்குப்பிராந்திய செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGG யின் தவிசாளர் பொறியியளாளர எம்.எம் அப்துர்ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷேஹ்; முஹம்மட் நஜா, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஷ்ஹுர், தலைமைத்துவ சபை உறப்பினர்களான னுச. எஸ்.எம் ஸாஹிர், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர்; னுச. ஐ.எல்.எம ரிபாஸ் மற்றும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தியதான செயற்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக, ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மக்கள் சந்திப்பில், NFGG யின் தவிசாளர் உட்பட அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். நல்லாட்சி மாற்றம் ஒன்றிற்காக முழுமையாகவும் முஸ்லிம் சமூகம் சார்ந்து முதன்மையாகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர்கள் என்ற அடிப்படையில், இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவது குறித்தும் இந்நிகழ்வில் நினைவுகூறப்பட்டது. இது தொடர்பான NFGG யின் ஊடக அறிக்கையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட ஆதரவாளர்களின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்குமான நேரமும் வழங்கப்பட்டது. இதன்போது எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போட்டியிட வேண்டியதன் அவசியம் குறித்து பல புத்திஜீவிகளும் ஆழமான பல கருத்துக்களை வெளியிட்டனர். இறுதியில் கலந்து கொண்ட ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் வகையில்NFGG தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் அவர்களினால் சிறப்புரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டமை குறிப்படத்தக்கது.