மூத்த பத்திரிகையாளர் இரத்தினசிங்கத்தின் மறைவு தமிழ் பேசும் உலகுக்கு பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பத்திரிகையுலகின் இமயம் எனக் கருதப்பட்ட எஸ்.டி.சிவநாயகத்தின் வலக்கரமாக இருந்து, தமிழ்ப் பேசும் வாசகர்களுக்கு பயனுள்ள செய்திகளை வழங்கி வந்த அவர், தனது இறுதிக் காலத்தில் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
தினபதி, சிந்தாமணி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியாகவும் அவர் பணி புரிந்தார். வயோதிப நிலையிலும் எழுத்துப் பணியையோ, வாசிப்புப் பணியையோ அவர் கைவிட்டவரல்லர். தான் எடுத்த விடயங்களை தீர்க்கமாக எழுதியவர். அவரது எழுத்து சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. பத்திரிகையுலகில் எவருக்கும் விலைபோகாதவராக இருந்தவர். தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்காகவும் தனது எழுத்தைப் பயன்படுத்தியவர். எதையும் நேருக்கு நேராகப் பேசும் சுபாவம்கொண்ட அவர் ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளர் எனவும் அமைச்சர் றிசாத் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அஷ்ரப்.எ.சமத்