அஷ்ரப் ஏ சமத்
சேர் பொன்னம்பலம் அருனாச்சலத்தின் 92வது மரைவு தினத்தினையொட்டி ஜனாதிபதி
செயலக வளவில் உள்ள அன்னாரது சிலைக்கு அமைச்சா்களான ஜோன் அமரதுங்க,
டி.எம். சுவாமிநாதன் அன்னாரது குடும்பத்தினா் மலா் மாலை அணிவித்தனா்.
அத்துடன் சேர் பொண்ணம் ்பலம் பற்றி அமேரிக்கா ஹவாய் பல்கலைக்கழக றிசி
தொன்டு நத்சா சுவாமி உரை நிகழ்த்தினாா். இந் நிகழ்வில் தெள்ளிப்பளை திரு
முருகன், மட்டக்குழி செந்தில் சிவ குமரன் குருக்கள் அமைச்சா்களும் உரை
நிகழ்த்தினாா்கள். இந் நிகழ்வினை வட கொழும்பு இந்து பரிபாலன சபையினா்
ஏற்பாடு செய்திருந்தனா் 20 அறநெறி மாணவா்களுக்கு சேர் பொன்னம்பலம்
நினைவாக புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மாணிப்பாயை பிற்ப்பிடமாகக் கொண்ட சேர் பொன்னம்பலம் அருனா சலம் சேர்
பொன்னம்பலம் ராமநாதன் மற்றும் குமாரசுவாமி ஆகியோரின் சகோதரா் ஆவா்
இவா்களது சிலைகளும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன. அருனாசலம் அரசாங்க
அதிபா், அரசியலமைப்பு உறுப்பிணா். ஒக்ஸ்போா்ட் பல்கழைக்கழகத்தில் கல்வி
கற்று இலங்கையின் நிருவாகம், ஆளுனா், மாவட்ட நீதிபதி, செயலாளா் போன்ற
பல்வேறு பதவிகளை அப்போதைய வெள்ளையா் ஆட்சியில் பதவி வகித்தவா். அதன் பின்
அரசியலிலும் ஈடுபட்டுள்ளாா் அதன் பின் இலங்கையின் பல்வேறு நிருவாக
திட்டங்களையும் அறிமுகப்படுத்தியவா். 1893 பிறந்துள்ளாா். 1953 காலம்
வரை இலங்கையில் பல உயா் பதவிகளை வகுத்துள்ளாா். அதற்காகவே இவரது சிலை
ஜனாதிபதி செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.