மதீனா விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகம் தெரிவு : தேசிய ரீதியிலும் சாதனை..!

சுலைமான் றாபி

நிந்தவூரில் சிறப்பாக இயங்கிவரும் மதீனா விளையாட்டு கழகத்தின் 2016ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவும், மீள் புனரமைத்தலும்  அண்மையில் நிந்தவூர் அல்- அதான் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அன்சார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட் கலந்து கொண்டதோடு கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

20160109_203956_Fotor

அந்த வகையில் கழகத்தின் புதிய தலைவராக உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அன்சார், உபதலைவர் A.பர்சாத் செயலாளராக எஸ்.எம்.இஸ்மத் , பொருளாளராக ஷிம்றி அஹமட் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கானோர் கள் தெரிவு செய்யப்பட்டதோடு, ஏனைய பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

20160109_200604_Fotor

இதேவேளை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமானது கடந்தகாலத்தில் 18 உடற்கல்வி ஆசிரியர்களை விளையாட்டுத் துறைக்கு உள்வாங்கியதோடு, ஒரு மாவட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் இலங்கையின் தரைப்படை விளையாட்டுப் பிரிவிற்கு இக் கழகத்திலிருந்து 04 பேர் தெரிவு செய்யப்பட்டதோடு இந்த கழகத்தினைச் சேர்ந்த இஸட்.எம்.ஆசிக் அண்மையில் இடம்பெற்ற 41வது இலங்கையின் தேசிய விளையாட்டுப் போட்டியின் பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் 40.51 மீற்றர் தூரம் எறிந்து தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தினை பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்