மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அன்ரனி சகாயம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் குடும்பத்தினரால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடந்த புதன் கிழமை கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை. எனவும் கைதிகளின் விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் பொங்கல் பண்டிகையை பகிஸ்கரித்தும் இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை யாழில் முன்னெடுக்கவுள்ளதாக இணைப்பாளர் அன்ரனி சகாயம் தெரிவித்தார்.