எஸ்.எம்.அறூஸ்
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான மாநாட்டுக் குழுக் கூட்டம் நேற்று இரவு (8) கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
இவ் கூட்டத்தில் ,ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும். கட்சியின் அரசியல் விவகார செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் , முன்னால் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், உயர் பீட செயலாளர் மன்சூர் ஏ காதர் , இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , பேராளர் மாநாட்டு செயலாளர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் ஜனாதிபதி தை்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாலமுனையில் கட்சியின் தேசிய மநாடு நடைபெறும் என்று அமைச்சர் 2010ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்ததற்கமைவாகவே இம்மநாடு பாலமுனையில் மார்ச் மாதம் நடைபெறுகின்றது.
இம்மாநாட்டுக்குரிய ஏற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டதுடன் இக்குழு மாநாட்டுக்குரிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தலைவர் ரவுப் ஹக்கீம் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டில் நேர்மையாகவும், ஆளுமையாகவும் தனது பங்களிப்புக்களை வழங்கி வரும் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் சொந்தக் கிராமமான பாலமுனையில் இம்மாநாடு நடைபெறுவது அவரது அரசியல் முன்னடுப்பில் முக்கிய நிகழ்வாகும்.